விஜயகாந்தின் உடல்நிலை : மனைவி வெளியிட்ட காணொளி

0
198

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றும் அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் காணொளி வெளியிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். எனினும் கடந்த 24 மணி நேரமாக விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

தலைவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

இன்று காலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வழக்கமான அறிக்கைதானே தவிர பயப்படவோ பதற்றமடையவோ ஒன்றுமில்லை. கப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்களுடன் நானும் இணைந்து தலைவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தலைவர் வெகு விரைவில் பூரண நலம் அடைந்து வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பார். அத்தனை பேரின் பிரார்த்தனையும் அவர் செய்த தர்மமும் அவரை கப்பாற்றும்.

கடைக்கோடி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நான் கூறுவது யாரும் பயப்பட வேண்டாம். கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக தலைவரை பார்த்துக்கொள்கிறேன். கப்டனின் உடல்நிலை குறித்து வரும் வதந்தியை நம்ப தேவையில்லை. தலைவர் நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here