விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்! வதந்திகளை நம்ப வேண்டாம்: மகன் விஜய பிரபாகரன் தகவல்

0
172

வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் விஜயகாந்த் உடல்நிலை பற்றி சித்தரிக்கிறது என விஜய பிரபாகரன் விமர்சனம். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், “கேப்டனின் உடல்நிலையில் சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நலமுடன் இருக்கிறார்.

அவர் நூறு வயது வரை நன்றாக இருப்பார். ஆனால் பழைய படிவருவாரா, பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளை எடுத்து வருகிறோம்” என கூறியிருந்தார்.

இதையடுத்து பல ஊடகங்களிலும் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு என தலைப்புடன் செய்தி வெளியானது.இது குறித்து ட்விட்டரில் விஜய பிரபாகரன் வெளியிட்டுள்ள பதிவில், ”கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்…

வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது…இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி!!

கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்..

வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் திகதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here