கரூரில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக தமிழகபொலிஸ் மா அதிபர் ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விஜய் விழா இடத்திற்கு தாமதமாக வந்ததால் கூட்டம் அதிகரித்ததோடு, மேலும் கடுமையான வெயிலில் காத்திருந்த நேரத்தில் அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளமை வருந்தத்தக்கது. சமீபத்திய தகவலின்படி, 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார்.
விஜயின் டிவிகே கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் நண்பகல் 12 மணிக்குள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவார் என்று குறிப்பிட்ட பிறகு, கூட்டம் அதிகரித்ததாக அவர் மேலும் கூறினார்.
“(கூட்டத்திற்கு) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. காலை 11 மணி முதல் கூட்டம் வரத் தொடங்கியது. அவர் மாலை 7.40 மணிக்கு வந்தார். கடுமையான வெயிலில் மக்களுக்கு போதுமான உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.”
“எங்கள் நோக்கம் யாரையும் குறை கூறுவது அல்ல, ஆனால் நாங்கள் உண்மைகளை மட்டுமே கூறுகிறோம்,” என்று காவல்துறை மா அதிபர் மேலும் கூறினார்.
ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கை 10,000 என்று கூறியிருந்தாலும், கூட்டத்திற்கு சுமார் 27,000 பேர் வந்ததாக வெங்கடராமன் கூறினார்.
சுமார் 20,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
“500” பொலிஸார் மட்டுமே பணியில் இருந்தார்களா என்று கேட்டபோது, கூட்டம் நடைபெறும் இடம் ஒரு பொது சாலை என்றும், அதிக பொலிஸ் பாதுகாப்பு இருந்திருந்தால் மக்களுக்கு போதுமான இடம் இருக்காது என்றும் கூறினார்.
இந்த துயர சம்பவத்திற்கு ஏதேனும் “பாதுகாப்பு குறைபாடு” காரணமா என்று கேட்டதற்கு, அதற்கான காரணத்தை விசாரிக்க அரசாங்கம் ஒரு விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஏற்பாட்டாளர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது, மேலும் காவல்துறை “மேலதிக உதவி” மட்டுமே,வழங்கும் – மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து கூடுதல் காவல்துறையினரை நியமிக்க முடியாது.
தற்போது கால்வதுரை அதிகாரிங்கள் குழு கரூருக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.




