விஜய் மகனின் ‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு

0
3

நடிகர் விஜய்​யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்​குந​ராக அறி​முக​மாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறு​வனம் தயாரிக்​கிறது. ஆக் ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்​பத் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர்.

தமிழ், தெலுங்கு உள்பட பன்​மொழி படமாக உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​ட​தாக​வும் டிச. 23-ம் தேதி டீஸர் வெளி​யாகும் என்​றும் லைகா நிறுவனம் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்​துள்​ளது. “இப்​படம் சமூகத்​தால் முழு​மை​யாகப் புரிந்து கொள்​ளப்​ப​டாத ஒரு​வன் தன் இலக்​கு​களை நோக்கி நகர்​வதைப் பேசும். வேட்​டை, கொள்​ளை, காமெடி என இந்​தப் படம் பரபரப்​பான சினிமா அனுபவத்​தைக் கொடுக்​கும்” என்று இயக்​குநர் சஞ்​சய் ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தார்.

hindutamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here