தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை காவல்துறை பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சாரதியான அவர், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாகவும், இது பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன், கைதானவர் இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.