விண்வெளியில் மிதக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை!

0
149

இவ்வாண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கட் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், உலகக் கோப்பை தொடருக்கான வெற்றிக்கிண்ணம் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையின் 13 ஆவது தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் உலகக் கோப்பைக்கான தொடருக்கான தகுதி சுற்று தற்போது சிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்த ஐசிசியினால் வித்தியாசமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகக் கோப்பை தொடருக்கான வெற்றிக்கிண்ணம் பிரத்யேகமான ஒரு பலூனில் பொருத்தப்பட்டு 1.20 இலட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் வெற்றிக்கிண்ணம் செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு எடுத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here