“விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்”

0
26
dailythanthi

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரியப் போகிறார்கள் என்று நீண்டகால மாக வதந்திகள் வெளியாகி வந்தன. இப்போது அந்த வதந்திகள் ஓய்ந்துவிட்டது. இதற்கிடையில் தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள் குறித்து அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

அதில் அவர், “விமர்சனம் என்றாலே நாம் தவறாகவே புரிந்துகொள்கிறோம். அது நிச்சயம் எதிர்மறை விஷயமாகவே இருக்கக்கூடும் என்று நினைத்து விடுகிறோம். ஆனால் அப்படி நினைப்பது தவறு. கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு நம்மை விமர்சிக்க உரிமை உண்டு. அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here