விமலின் “மகாசேனா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
100

‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘களவாணி, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கலகலப்பு’ போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் ‘சார்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது வடம் படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மகாசேனா’. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here