சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னரும் வெளிநாட்டு விமானிகள் இவ்வாறு பணிபுரிந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமான சேவையில் இருந்து சுமார் 60 விமானிகள் விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை விமான சேவைக்கு வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, சர்வதேச நாடுகளின் விமானிகளும் குறித்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய விமான சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான காலம் தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானத்தை எட்டவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு விமானிகளுக்கான நேர்காணல் விரைவில் நடத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னரும் வெளிநாட்டு விமானிகள் இவ்வாறு பணிபுரிந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.