விமான இயந்திரத்தில் தீ பரவல்;அவசரமாக இறக்கப்பட்ட டெல்டா விமானம்

0
10

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரம் தீப்பிடித்ததால், டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த விமானம் போயிங் 767 ரகத்தைச் சேர்ந்தது, அது அட்லாண்டா விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விமானத்தின் இடது இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

எனினும், விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான நிலைய தீயணைப்புப் படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here