விமான சேவை கட்டுப்பாடுகளை நீக்கியது ஈரான்

0
2

இஸ்ரேலுடனான 12 நாள் மோதலுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஈரான் நீக்கியுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (CAO) அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நடவடிக்கைகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக CAO தனது வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் அனைத்து விமான நிறுவனங்களும் பயண நிறுவனங்களும் மீண்டும் 24 மணி நேர விமான சேவைகளையும் டிக்கெட் விற்பனை சேவையையும் வழங்க முடியும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதல் ஜூன் 24 அன்று போர் நிறுத்தத்துடன் முடிவடைந்தது.

ஈரானிய வான்வெளியை படிப்படியாக மீண்டும் திறக்கும் நடவடிக்கைகள் ஜூன் 26 அன்று தொடங்கியது, விமான நிலையங்கள் படிப்படியாக இயல்பான செயல்பாடுகளைத் தொடங்கின. ஜூலை 17 அன்று, மெஹ்ராபாத் தவிர, அனைத்து விமான நிலையங்களும் முழு சேவைக்குத் திரும்பியதாக CAO அறிவித்தது, தற்போது அனைத்து விமான சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here