விமான நிலையம் அருகே பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை!

0
3

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை மீறி பட்டம் விடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருண ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“விமான நிலையத்தைச் சுற்றி பட்டங்களை பறக்கவிடுவது விமானங்களுக்கும் விமானப் பயணிகளின் உயிருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், 300 அடிக்கு மேல் பட்டன்களை பறக்கவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here