பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) நேற்று (20) வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கழிப்பறைக்குள் சந்தேகத்திற்கிடமான பல பொதிகளை தூய்மை பணியாளர் ஒருவர் கவனித்து விமான நிலைய சுங்க, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.
சோதனையின் போது, பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் போதைப்பொருட்களை கொண்டு வந்தவர்கள், அவற்றை அந்த பகுதி வழியாக கடத்த முயற்சித்ததற்குப் பொறுப்பானவர்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




