பிரேசிலில் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி மரிலியா மெண்டோன்கா சென்ற இலகுவகை விமானம் விழுந்து நொறுங்கியதில் அவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தனிப்பாடல் தொகுப்புக்காக 2019ஆம் ஆண்டு லத்தீன் கிராமி விருது பெற்ற மரிலியா மெண்டோன்கா, தயாரிப்பாளர், உதவியாளர் ஆகியோருடன் இலகு வகை விமானத்தில் சென்றுகொண்டிருந்தார்.
இந்த விமானம் அருவிப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அவர்கள் மூவரும், விமானிகள் இருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.