இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15-ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அனுஷ்கா சர்மா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,எங்களது இதயங்களில் மகிழ்ச்சியும் அன்பும் முழுவதுமாக நிறைந்துள்ளது. எங்களுக்கு கடந்த பெப்ரவரி 15 -ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது குடும்பத்தின் புது உறுப்பினரான வாமிகாவின் சகோதரன் அகாயை இந்த உலகத்துக்கு வரவேற்கிறோம்.
எங்களது வாழ்வின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் எங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.இந்த தருணத்தில் எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன் விராட் மற்றும் அனுஷ்கா எனப் பதிவிட்டுள்ளார்.
— Virat Kohli (@imVkohli) February 20, 2024