விரைவில் நான்காவது கொரோனா தடுப்பூசி

0
171

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்காக நான்காவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான PCR பரிசோதனையை தேவைக்கேற்ப முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு கொரோனா நோயாளர்கள் பதிவாகுவார்களாயின், அந்த பகுதிகளை இனங்கண்டு பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here