திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டக்கலை சமாதான புரத்தை சேர்ந்த வயோதிபர் ஒருவர் 24/05/2021 திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபர் 23/05/2021 விறகு பறிக்க சென்று வீடு திரும்பாததையடுத்து வீட்டில் உள்ளவர்கள் பொலிஸ் நிலையயில் முறைப்பாடு செய்ய இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபர் 66 வயதுடைய மீரா சாய்பு எனும் முஸ்லிம் வயோதிபர் எனவும் மழையில் விறகுக்கு சென்றமையினால் தடுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக திம்புள-பத்தனை பொலிசார் குறிப்பிட்டனர்.

நீலமேகம் பிரசாந்த்.



