அத்தியவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் உணவு ஓய்வு நேர வேளையில் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வி துறைசார்ந்த ஊழியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள்,டிக்ககோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள்,வைத்தியர்கள் சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்களின் ஆர்ப்பாட்டம் ஹட்;;டன் டிக்கோயா நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்தது ஆர்ப்பாட்டகாரர்கள் உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே,பசிக்கு நிறம்,மதம் கிடையாது,விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம்,ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,சிற்றூழியர்கள் உட்பட வைத்தியசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் டீசல் இல்லை,கவலைக்கிடமான நிலையில் இலவச சுகாதார சேவை, சுகாதார சேவையை பாதுகாப்போம்,பிள்ளைகளின் கல்வியினை பாதுகாப்போம். போன்ற வாசகங்களை எழுத்திய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம், கோசமிட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு அரச ஊழியர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள.;
முதியவர்களை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு நாளுக்கு நாள் விலை அதிகரித்து சென்றால் எவ்வாறு இந்த சம்பளத்தில் உயிர்வாழ்வது எதிர்கால சமூதாயத்திற்காவது நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் அதற்கு இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் பொறுப்பு கூற வேண்டும் அவர்கள் இந்த பிரச்சினையினை இழுத்தடித்து தங்களது சுய தேவையினை நிறைவேற்றிக்கொள்ளாது நாட்டு மக்களின் நிலையினை உணர்ந்து செயப்பட வேண்டும் என ஒருவர் தெரிவித்தார்.
மற்று மொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த அரசாங்கம் நாட்டு மக்களை பற்றி ஒரு துளியளவு கூட சிந்திக்காது செயப்படுகின்றது உயிர் காக்கும் மருந்துகள் இன்னும் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளது. இதனால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மலைவாஞ்ஞன்