இந்த தம்பதியினருக்கு தற்போது 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்யப் போவதாக வெளியான செய்திகளை பார்த்து அதிர்ச்சியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து பாதிவு ஒன்றை போட்டுள்ளார்.
நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தற்போது 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில், திடீரென அசின் விவாகரத்து செய்யப் போகிறார் என்று வதந்திகள் பரவி வருகின்றது.இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது முற்றிலும் வதந்தி என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நாங்கள் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கின்றது. மேலும், உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது ட்ரை பண்ணுங்கள் என நடிகை அசின் பதிவிட்டுள்ளார்.