மகியங்கனையில் இருந்து நாவபிட்டி பகுதியை நோக்கிபயணித்த வேண் ஒன்று வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்த்தில் 16பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிமகியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேண் ஒன்று நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் உலப்பனை பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி குடியிருப்பு ஒன்றின் மீது குடைசாய்ந்தத்தில் 16பேர் காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 30.08.2018.வியாழகிழமை இரவு 11.30மணி அளவில் உலப்பனை முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
குறித்த வேண் வண்டியில் பயணித்தவர்கள் நாவலபிட்டி கலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மையங்கனை பகுதியில் வழிபாடு ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடுதிரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
குறித்த வேண் வண்டியில் அதிகமாக சிறுவர்களே பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது
இதேவேலை நாவபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளவர்கள குறித்து எவ்வித கவலை படதேவையில்லையெனவும் வேண் குடைசாய்ந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு குறித்த வேண் வண்டியும் சேதமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்திற்கான காரனம் வேண்வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)