கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் எடுத்த விபரீத முடிவு.
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லக் ஷயா.இவர்களின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாயார் பிரேமாவும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஷின் வீட்டில் இருந்து நேற்றிரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், பிரேமா, லக் ஷயா, யக்சிதா ஆகியோர் விஷம் குடித்தும் சடலமாக கிடந்தனர்.
அவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.