அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இரண்டு மாத ஆண் குழந்தையை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று காலை கண்டெடுத்துள்ளனர்.
பொலிஸார் வந்து பார்த்தபோது, ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்டு சுவர் அருகே கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குழந்தையை உடனடியாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தைக்கு ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தாயை கண்டுபிடிக்க அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.