மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினதும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினதும் நிதியொதுக்கீட்டில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாக இருந்த நுவரெலியா, கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட லிலிஸ்லேன்ட் பிரிவில் 105 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா 30-09-2018 இடம்பெற்றது. மேலும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா அவர்களின் 45 வது பிறந்த தின நிகழ்வும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் அங்கத்தவர் தொழிலார் சங்கத்தில் இனைந்து கொண்டதையும் காணமுடிந்தது.
இநிநிகழ்வில் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ஆர். இராஜாராம், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்