வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவித்தல்

0
139

வெதுப்பக பொருட்களுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் வெதுப்பக தொழிலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை பல்வேறு மட்டங்களில் இருப்பதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் திரு.கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் மாவின் விலை குறைந்துள்ள போதிலும் வெதுப்பக உற்பத்தியாளர்கள் வெதுப்பக பொருட்களின் விலையை குறைப்பதில் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் வெதுப்பக உற்பத்தியாளர்கள் ​​சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here