வெனிசுவேலாவுக்கு சொந்தமான சுமார் 5 கோடி பீப்பாய் மசகு எண்ணெய் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் “வெனிசுவேலா தன்னிடம் உள்ள 30 முதல் 50 மில்லியன் (3 முதல் 5 கோடி) பீப்பாய் மசகு எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். இது சர்வதேச சந்தை விலையில் விற்பனை செய்யப்படும்,” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணெய் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டிற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
“இந்த நிதி யாருக்கும் அநியாயமாகச் சென்றடையாது. இது வெனிசுவேலா மக்களின் நல்வாழ்வுக்கும் அமெரிக்காவின் நலன்களுக்கும் மட்டுமே செலவிடப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்,” என ட்ரம்ப் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.




