வெயிலால் முகம் கருப்பா மாறுதா.. தயிரை வைத்து Face Pack தயார் பண்ணலாம்

0
73

வெயில் காலங்களில் முகத்தின் அழகை அதிகரிக்க தயிரைக் கொண்டு செய்யும் Face Pack குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெயில் காலங்கள் வந்துவிட்டால் சருமம் பாழாகிவிடுவதுடன், வெளியிலால் முகம் கருமையாகவும் மாறத் தொடங்கிவிடும். இவ்வாறு வெயில் காலத்தில் முகம் கருமையாகக்கூடாது என்றால் தயிரை கொண்டு சில விடயங்களை மேற்கொள்ளலாம்.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் வெளியேற்றி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக தயிர் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.

கீழே கொடுக்கப்படும் ஒவ்வொரு Face Packகையும் பயன்படுத்தும் போது, 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பௌல் ஒன்றில் 2 ஸ்பூன் தயிரை எடுத்து நன்கு அடித்துக் கொண்டு, அதனை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவினால் முகத்தில் கருமை நீங்கும்.பௌல் ஒன்றில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்ந்து நன்கு கலந்து கொண்டு, மேலே கூறியது போன்று பயன்படுத்தவும்.

பௌல் ஒன்றில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது தயிரை சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்தினால், சருமம் வெள்ளையாக மாறுவதுடன், கருமையும் காணாமல் போகின்றது.ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

4-5 ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக்கி, பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு அதனை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here