நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு 04/06/2021 வெள்ளிக்கிழமை சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது. வெறுமனே 15 நிமிடங்கள் இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் பல முக்கிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதாவது நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வினாப் பத்திரங்கள் அச்சிட்டு வழங்குவதற்கான செயற்திட்டம் தடையில்லாமல் நடைபெற திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதற்காக நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் தலைமையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் வெளிக்கள ஊழியர்கள் அடங்கிய சுகாதார குழு ஒன்று அமைந்துள்ளதாகவும் அக்குழு தொடர்தேர்ச்சியாக பிரதேச ங்களை கண்காணிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை பெற்றுக் கொடுத்தமைக்கு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்