மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனின் அவர்களின் பண்முக படுத்தப்பட்ட நிதியில் இருந்து வெளிஓயா,பதுக்காடு மற்றும் டிக்ஓயா,எபோர்ட்ஸ்லி,மார்ஸ் பிரிவு பாதைகள் புனரமைக்கபட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் திரு. கிருஷ்ணன் ,மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் தி.பிரசாத் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.