வெலிஓயா புதுக்காடு தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 50 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

0
137

ஹட்டன் வெலிஓயா புதுக்காடு தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கண்டி இந்திய உதவித் தூதுவர் திரேந்திரசிங், அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. திலகராஜ், இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் ரமேஸ் ஐயர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here