பொலன்னறுவையில் இருந்து வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை ஒன்றில் பனியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று முத்துவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) பதிவாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் சுமார் எண்பது ஊழியர்கள் இருந்துள்ளதுடன் , விபத்தில் படுகாயமடைந்த நால்வரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறு காயங்களுக்கு உள்ளான ஊழியர்கள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.