வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்ற மகிந்த..!

0
102

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயம் நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹான வீட்டில் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் மருத்துவ தேவைகளை முன்வைத்து பெறப்பட்ட உத்தரவின் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here