வெல்லவாயவில் நீரில் மூழ்கி 2 பேர் பலி!

0
131

வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர்களில் நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் இருவர் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மற்றொரு நபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று  வெள்ளிக்கிழமை தெரணியகல – ரக்கணவ நீர்வீழச்சியில் நீராடச் சென்ற 9 வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய சிறுமி தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி தெரணியகல – அந்தெட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கடந்த வாரம் எட்டம்பிட்டி பகுதியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் அண்மை காலமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே நீர்வீழ்ச்சிகள் , ஆறு மற்றும் கடலில் நீராடச் செல்லும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீர் நிலைகள் குறித்த விழிப்புணர்வின்மையால் 2016 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு இலட்சம் பேரில் 3.5 பேர் உயிரிழப்பதாக ஆய்வொன்றில் தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here