மஸ்கெலியா வைத்தியசாலை சுற்றுச் சூழல் அசுத்தமாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் சுகாதார வைத்திய பிரிவினரால் சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மஸ்கெலியா நவயுகம் சமூகநல நோக்கு அமைப்பின் உறுப்பினர்கள், பிரவுன்லோ 320N பிரிவினுடைய சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கத்தின் உறுப்பினர்கள், மஸ்கெலியா சமுர்த்தி பிரிவினர், ரிக்காடன் இரானுவ முகாமின் விசேட அதிரடிப்படை வீரர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களும் இனைந்து மிகவும் நேர்த்தியான முறையில் வைத்தியசாலை சுற்றுச் சூழலை சுத்தம் செய்தனர்.
நீண்டகாலமாக சுத்தம் செய்யப்படாமல் பராமரிப்பின்றி இருந்த வைத்தியசாலை படிக்கட்டுகள், சிறுவர் பூங்கா, முட்புதர்கள் அனைத்தும் சுத்தம் செய்ப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலை புது வெளிச்சம் பெற்றது போல தோற்றமளிப்பது சிறப்பம்சமாகும்.
சிரமதான வேலைத்திட்டத்தில் பங்குபற்றியவர்களின் அர்ப்பணிப்புடனான சமூக சேவையை பாராட்டி மாவட்ட வைத்திய அதிகாரியினால் நன்றி நவிழல் கடிதங்களும் வழங்கப்பட்டது.
செய்தி: ரொமேஸ் தர்மசீலன். (மஸ்கெலியா)