வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

0
195

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 2,885 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here