கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 240 நாடுகள் இந்திய மாணவர்களை உயர்கல்விக்காக சேர்த்துக்கொண்டுள்ளன.
பெருமளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க முன்வருவதால், விசாக்களின் தேவை இதுவரை அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் பலர் தங்கள் வெளிநாட்டுக் கனவுகளை நனவாக்க, போலி முகவர்களின் வலையில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை மாணவ வீசாக்களுக்கான தேவை பொதுவாக மே மாதத்தின் மத்தியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.