வெளிநாட்டு பணியாளர்கள் தினத்தினையொட்டி அக்கறை வீதி நாடகம் கொட்டகலையில் அரங்கேற்றம்.

0
235

கடல் கடந்து உடல் வறுத்தி பணிபுரிகின்ற வெளிநாட்டு பணியாளர்களின் தினத்தினையொட்டி வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்கையினை சித்தரிக்கும் வகையிலும் அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கிலும் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படுகின்ற நெறிபுரழ்வுகளை எடுத்துக்காட்டும் வகையில் அக்கறை என்ற வீதி நாடகம் நேற்று (18) கொட்டகலை டிரேட்டன் முத்தமிழ் மன்றம் வாசிகசாலை முன்றலில் இடம்பெற்றது.

இது குறித்து ப்ரோட்டப் தொழிற்சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கருப்பையா மைதிலி கருத்து தெரிவிக்கையில்…..

மலையகப்பகுதிகளில் வறுமை காரணமாக அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். குடும்ப பெண்கள் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையினை ஒளிமயமாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அதிகமானவர்கள் செல்கின்றனர்.

இவ்வாறு செல்லும் போது அந்த பிள்ளைகள் தங்களது உறவினர்களின் வீடுகளிலேயே விட்டு செல்கின்றனர் பெரும் பாலானவர்கள் தாத்தா பாட்டியிடம் விட்டு செல்கின்றனர் இவ்வாறு விட்டு செல்லும் பிள்ளைகளில் அதிகமானவர்கள் தங்களது கல்வியினை இடை நிறுத்தி விடுவதாகவும் இதனால் மலையக பாடசாலைகளில் இடை விலகல் அதிகரித்துள்ளதாகவும் சிறுவர் தொழில் புரிபவர்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவு உயர்வடைந்துள்ளதாகவும், அது மட்டுமல்லாது சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலையினை மக்களுக்கு தெளிவூட்டி சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் வெளிநாடு செல்பவர்கள் எவ்வாறான முறையில் சட்ட பூர்வமாக செல்ல வேண்டும் அவ்வாறு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவூட்டும் வகையில் தேயிலை இறப்பர் அப்பால் அந்நியச் செலவாணியினை பெற்றுத் மற்றுமொரு சமூகம் என்ற வகையில் அவர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் குறித்த வீதி நாடகம் ஒழுங்கு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நாடகத்திற்கு பொகவந்தலா பகுதியை சேர்ந்த தியேட்டர் மெக்ஸ் நாடக கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்டன.

ப்ரோட்டெக் வீட்டு பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பல்வேறு தோட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து நாடக கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here