வேலை நிறுத்த போராட்டத்திற்கு கொட்டக்கலை வர்த்த சங்கம் முழு ஆதரவு புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு
தகவல் : நீலமேகம் பிரசாந்த்
பொருட்களின் அத்தியாவசிய விலையேற்றம் காரணமாக 28ம் திகதி முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கொட்டக்கலை வர்த்தக சங்கம் முழு ஆதரவை வழங்குவதாக கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வர்த்தக சங்க கூட்டத்தொடரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு கொட்டகலை நகரம் முழுவதும் மூடப்பட்டு கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக வர்த்தக சங்கத்தில் ஏகமனதாக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.