வைத்தியசாலைகளில் நிலவும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு

0
245

மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நுவரெலியா வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here