நாடளவிய ரீதியில் வைத்தியசாலைகளில் இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உதவும் முகமாக தலவாக்லை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசன் தலைமையில் இன்று (10) திகதி தலவாக்கலை சாயி சமித்தியுடன் இணைந்து இரத்ததான நிகழ்வு ஒன்று தலவாக்லை லிந்துலை கட்டடத்தொகுதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கொரோனாவுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற குறித்த இரத்த தான நிகழ்வில் தலைவர் பாரதிதாசன் தனது இரத்தத்தினை வழங்கி குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இன்று காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வுக்கு கொரோனா அச்சுறுத்தலினையும் பொருப்படுத்தாது சுமார் 200 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் மக்கள் இவ்வாறு தேவையினை உணர்ந்து செயப்படுவது ழுழு நாட்டிக்கும் முன் உதாரணமான விடயம் என நகர சபையின் தலைவர் லெ. பாரதிதாசன் இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு தலவாக்லை சாயி சமித்தியின் தலைவர் இளங்கோவன்,உட்பட பிரதேசவாசிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கே.சுந்தரலிங்கம்