வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்- வெளிநோயாளர்கள் பெரும் அவதி

0
222

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கும் அரச வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவற்றுக்கான தீர்வுகள் எவையும் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை” என தெரிவித்து 03.08.2018 அன்று வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 03.08.2018 அன்று வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்பட்டன.

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

வைத்தியர்களின் சேவை நேரக் கொடுப்பனவு, சிங்கப்பூர் உடனான வர்த்த ஒப்பந்தம், மருத்துவர்களுக்கான வாகன சலுகை, வைத்தியத் துறையின் மீது அதிக வரி விதித்தல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தியே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here