பண்டாரவளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அடையாளந்தெரியாத குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.