ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து; 7 பேர் உடல் கருகி பலி! – தென்கொரியாவில் சோகம்!

0
172

தென்கொரியாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து சற்று தொலைவில் உள்ள நகரம் டேஜியோன். அங்கு பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று ஷாப்பிங் மாலில் கார் நிறுத்தும் அடித்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து கட்டிடங்களில் இருந்த மக்களும் வெளியேற்றப்பட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் அடிதளத்தில் பணியாற்றி வந்த 7 ஊழியர்கள் உடல்கருகி பலியாகியுள்ளனர். தீ விபத்து நடந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் ஷாப்பிங் மாலில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here