ஸ்பெக்ட்ரம் அமைப்பின வெற்றிகரமான நான்காவது தடவையாகவும் புலமை பரிசில் வழிகாட்டல் பரீட்சை!

0
160

தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமை பரிசில் முன்னோடி பரீட்சை மற்றும் பெற்றோருக்கான ஆலோசனை வழிகாட்டல் இன்று நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.ஸ்பெக்ட்ரம் அமைப்பு 4 வது தடவையாக ஏற்பாடு செய்த தரம் 5 இலவச புலமை பரிசில் பரீட்சை வழிகாட்டல் இன்று நோர்வூட் பிரதேச மாணவர்களுக்கு இடம்பெற்றது.

இப்பரீட்சைக்கு நோர்வூட் பிரதேசத்தின் அயரபி, போற்றி எல்பட உட்பட 8 பாடசாலைகளை சேர்ந்த 360 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றினர்.

மேலும் மாணவர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை இவ்வருடம் ஸ்பெக்ட்ரம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஹட்டன் காவல் நிலையத்தின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி குமாரி பங்குபற்றி் மகளிர் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பது தொடர்பாக விளக்கமளித்தார்.

இவ்வமைப்பின் தலைவர் , செயலாளர் , உட்பட அனைத்து அங்கத்தவர்களின் பங்களிப்போடு மிகச்சிறப்பாக இயங்கு வருகின்றமையும் குறிப்பிடதக்கவிடயமாகும் .

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here