இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இந்திய தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா – பிரதிகா ராவத், ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ரி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
இந்நிலையில், நேற்று (16) நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தை (258/6, 50 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி (262/6, 48.2 ஓவர்) வீழ்த்தியது.
இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா மற்றும் பிரதிகா ராவத், அதிரடியாக விளையாடி 48 ஓட்டங்களை சேர்த்து, புதிய உலக சாதனை படைத்தனர். 12 போட்டிகளில் இந்த ஜோடி, 1000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் 9 முறை 50+ ஓட்டங்களை இந்த ஜோடி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.