கொட்டகலை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் அன்றாட வேலை மற்றும் அன்றாட வறுமானத்தை இழந்த குடும்பங்களுக்கு ரூபா 2000 வழங்க அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்து அந்நிவாரணத்தில் கொட்டகலை கிராமசேவகர் பிரிவில் 900 பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபருக்கு மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த முறை அரசாங்கத்தால் நிவாரணத்தொகையாக 5000 ரூபா வழங்கப்பட்டது. அந்நிவாரணத்தின் போது ஏறத்தாழ 980 குடும்பங்கள் கொட்டகலை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பெற்றுக்கொண்டனர். ஆனால் இம்முறை வழங்கப்பட்ட இரண்டாயிரம் நிவாரணம் வெறுமனே 47 குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு எஞ்சிய தொள்ளியிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கையை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கூறி அரசாங்க அதிபருக்கு புஸ்பா விஸ்வநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்