தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைய நுவரேலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கந்தப்பளை ஸ்ரீ ஜிநேன்ரா ராமய விகாராதிபதி தம்பகொள்ளே சோமாநந்த தேரரின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
அவருடைய ஒத்துழைப்புடனும் நுவரெலியா பிரதேச சபையும் இணைந்து covid-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் கந்தப்பளை ஸ்ரீ ஜிநேன்ரா ராமய விகாரையில் 20/06/2020 ஞாயிற்றுக்கிழமை இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் , கந்தப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி, கந்தப்பளை பொது சுகாதார பரிசோதகர், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
நீலமேகம் பிரசாந்த்