ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகள் !
2018 ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகள் 26.01.2018 இன்று கோலாகளமாக கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக தமிழ் பாடசாலைகளுக்கான கல்வி அமைச்சின் பணிப்பாளர் முரளிதரன் அவர்களும் கல்லூரியின் ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அத்தநாயக்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு கொட்டக்கலை வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி சாவித்திரி மற்றும் தலவாக்கலை மக்கள் வங்கி, இலங்கை வங்கி , செலான் வங்கி, சம்பத் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி போன்ற வங்கிகளின் முகாமையாளர்களும், கலந்து சிறப்பித்தனர்.
இயற்கையின் பொக்கிஷங்கள் என போற்றப்படும் எல்ஜீன் , சென்கிளேயார்,டெவன், அபர்டீன் எனும் நீர்வீழ்ச்சி நாமங்களோடு களமிறங்கிய நான்கு இல்லங்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக இவர்களின் திறமை காணப்பட்டது.
எல்ஜீன் இல்லத்திற்கு பொறுப்பு விரிவுரையாளர்களாக உதயகுமார்,திருமதி . ஹொலகம.,சௌந்தரராஜன் ,அனுருத்தன்,ரமணி வசந்த என்பவர்களும் இல்லத்தலைவனாக பிரதாஸ் விளையாட்டு தலைவர்களாக கோபிநாதன், தனுஷா செயல்பட்டனர்..
சென்கிளேயார் இல்லத்திற்கு பொறுப்பு விரிவுரையாளர்களாக கிருஷ்ணகுமார், பரசுராமன்,கமலநாதன்,தர்ஷினி, ஜெயரத்னவும் செயல்பட்டனர்.இல்லத்தலைவனாக கலைவாணன் விளையாட்டு தலைவர்களாக தென்னக்கோனும் தீபிகாவும் செயல்பட்டனர்.
டெவன் இல்லத்திற்கு ராமச்சந்திரன், கம்சாநந்தினி,ரகுமான்,நாளனி,தர்மதாஸ் இவர்களோடு இல்லத்தலைவனாக கனேகொடவும் விளையாட்டு தலைவர்களாக மோகன்ராஜ் மற்றும் தொடன்வெலவும் செயல்பட்டனர்.
அபர்டீன் இல்ல விரிவுரையாளர்களாக அஷ்வத்தமன்,நந்தராம., மாலினி,விஷ்வமூர்த்தி,சஹாதேவன் அவர்களோடு இல்லத்தலைவனாக சார்ள்ஸ் அத்தோடு விளையாட்டு தலைவர்களாக கிஷோகாந்த், தனலக்ஷ்மி செயல்பட்டனர்.
விளையாட்டு நிர்வாக குழுவில் பீடாதிபதி ரமணி உப பீடாதிபதிகளான லோகேஷ்வரன், செனவிரத்ன,சஞ்சீவி,திருமதி.சீர்பாதம்,டினாக திருமதி லோகேஷ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர்களாகவும் விளையாட்டு போட்டிகளை நெறிபடுத்தியவர்களாக மெத்யூ, சிவக்குமார் , தனது சேவையினைசிறப்பாக செய்தனர்.
கண்களை கவரும் உடலியக்க கண்காட்சி நிகழ்வுகளை உடற்கல்வி விரிவுரையாளர்களான இரவீந்திரன் மற்றும் பண்டாரவும் நெறிப்படுத்தினர்.
இறுதியில் மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில்
முதல் இடம் எல்ஜின் 306 புள்ளிகள்
இரண்டாம் இடம் சென் கிளாயார் 271புள்ளிகள்
மூன்றாம் இடம் டெவோன் 265 புள்ளிகள்
நான்காம் இடம் அபர்டீன் எனும் 219புள்ளிகள்
அடிப்படையில் வெற்றிப்பெற்றனர்.
ஷான் சதீஷ்