ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா. முதல் நாள் முடிவு….!

0
188

அறிமுகப் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதம், ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் கான்பூரில் இன்று தொடங்கியநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 50 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிந்திர ஜடேஜா தனது 17-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். 7-வது ஓவரில் கெயில் ஜேமிஸன் பந்துவீச்சில் அகர்வால் 13 ரன்னில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு வந்த புஜாரா, கில்லுடன் சேர்ந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். புஜாரா நிதானமாக பேட் செய்ய, கில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார். பிற்பகல் உணவு இடைவேளேயின்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியபின், ஜேமிஸன் பந்துவீச்சில் 52 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கில் போல்டாகி வெளியேறினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தனர். அடுத்து கேப்டன் ரஹானே வந்து புஜாராவுடன் சேர்ந்தார்.இரு அனுபவ பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், விக்கெட்டை நிலைப்படுத்தி ஸ்கோர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சவுதி பந்துவீச்சில் 26 ரன்கள் சேர்த்தநிலையில் புஜாரா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானேவுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானாக ஆடினர்.
டெஸ்ட் தொடரில் ரஹானேவின் ஃபார்ம் பெரிதும் கவனிக்கப்படுவதால் அவரும் தேர்ந்தெடுத்து மட்டும் ஷாட்களை ஆடிமோசமான பந்துகளை மட்டுமே பவுண்டரி அடித்தார். ஆனால், ேஜமிஸன் பந்துவீச்சில் ரஹானே 35 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி செஷன் வரை விக்ெகட்டை இழக்காமல் நிதானமாக ஆடினர். அறிமுகப் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் 94 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ரவிந்திர ஜடேஜா 99 பந்துகளில் தனது 17-வது அரைசதத்தை எட்டினார். இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here