ஜேசு பிரான் உயிர்நீத்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினமான இன்று (09) மலையக பகுதியில் உள்ள கிறிஸ்த்தவ தேவஸ்தானங்களில் காலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
ஜேசு பிரான் சிலுவையில் அறயப்பட்டு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும.; இந்த தினத்தினை உலகில் வாழும் கிறிஸ்த்தவ மக்கள் மிகவும் சந்தோசமாகவும்; மிகவும் பக்தி பூர்வமாகவும் உணர்வு பூர்மாகவும் தேவாராததனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு தேவாராதனையும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் .இன்று (09) காலை 7.30 மணியளவில் ஆரம்பமானது.அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இதில் விசேட தேவ ஆராதனைகள் இடம் பெற்றதுடன் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் நீத்த அனைத்து கிறிஸ்;த்தவர்களையும் நினைவு கூர்ந்து மெழுவர்த்தி ஏற்றி அவர்களுக்காக விசேட பிரார்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தோட்ட மற்றும் நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்த்தவ பகதர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதே நேரம் இந்த பூஜை வழிபாட்டுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது,
மலைவாஞ்ஞன்