உலக சமாதான தினத்தையொட்டி இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையின் ஏற்பாட்டில் “விஷ்வ கீர்த்தி”ராஜ் பிரசாத் தலைமையில் ஹட்டனில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உலக சமாதானம் பற்றிய கருத்துக்கள் மற்றும் விளக்க உரைகள் ஆகியன தெளிவுபடுத்தப்பட்டதோடு விருதுகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் ஆளுனர் “விஷ்வ கீர்த்தி”கலாநிதி.இளங்கோ காந்தி மற்றும் ஹட்டன் வடக்கு 319’B’ பிரிவின் கிரம உத்தியோகத்தர் சிவலிங்கம் சுரேஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் சமூக சேவையாளர்கள் ஆகியோர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டி மகாத்மா காந்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு வறுமை கோட்பாட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்